English Grammar About Future Continuous Tense With Keywords தமிழில் // tamilvazhikkatral

Future Continuous Tense பற்றிய ஆங்கில இலக்கணம்

                Future Continuous Tense பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும். இது ஆங்கில இலக்கணத்தை வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உங்களுக்கு இருக்கும்.

ஆங்கில இலக்கணம் - Tense

Future Continuous Tense அல்லது Future Progressive Tense :

               எதிர் காலத்தில் நடக்க ஆரம்பிக்கும் என்று நாம் குறிப்பிடும் ஒரு செயல், நாம் எதிர்பார்க்கப்படும் காலத்திற்கு நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் என்று நம்பப்பட்டால் அதை Future Continuous Tense என்று சொல்கிறோம்.

              அதாவது எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வெளிப்படும் ஒரு செயல், நாம் குறிப்பிடும் நேரத்திற்கு முன்பே ஆரம்பித்திருக்கும். ஆனால் அந்த நொடியில் அது முடிவடையாது தொடர்ந்து கொண்டே இருந்தால்  அது Future Continuous Tense – ல் அமைந்திருக்கும் வாக்கியமாகும்.

ஆங்கிலம் பேசுபவர்கள் அதிகம் பயன்படுத்தும் ‘tense’ வகைகளில் இந்த Future Continuous Tense – ம் ஒன்று ஆகும்.

Something will happen in the future and continue for an expected period of time.

இது குறித்த அனைத்து விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube – வீடியோவைக் காணுங்கள். 

Future Tense in Tamil - 22 / Future Continuous Tense & Keywords // Learning Tense / தமிழில் :

அடையாள வார்த்தைகள் :

will be
shall be

tamilvazhikkatral

Examples :

I shall be coming.
நான் வந்துகொண்டு இருப்பேன்.
You will be writing.
நீ எழுதிக்கொண்டு இருப்பாய்.
They will be shouting.
அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு இருப்பார்கள்.

உணர்த்தும் நிலை :

1] Future Continuous Tense என்பது ஒரு செயல் அல்லது நிலை எதிர்காலத்தில் நடக்கப் போகிறது என்பதைக் குறிக்கிறது.

2]  அதே நேரம் இந்த எதிர்கால செயல் அல்லது நிலை தொடர்ச்சியாக நடந்து கொண்டுதான் இருக்கும்.

Future Continuous Tense விதிகள் :

1]  Will be அல்லது Shall be கண்டிப்பாக போடவேண்டும்.

2]  அதைத் தொடர்ந்து 1st form Verb – வுடன் ‘ing’ சேர்க்க வேண்டும்.

[ அதாவது V+ing ]

Examples :

1] The baby will be sleeping to his house.
குழந்தை அவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்.
2] I shall be helping for my mother.
நான் என் அம்மாவுக்கு உதவி செய்து கொண்டிருப்பேன்.

3] We shall be cleaning our home.
நாங்கள் எங்கள் வீட்டை சுத்தம் செய்து கொண்டிருப்போம்.

4] He will be singing different kinds of songs.
அவர் விதவிதமான பாடல்களைப் பாடி கொண்டிருப்பார்.
5] She will be coming here.
அவள் இங்கு வந்து கொண்டிருப்பாள்.
6] My sister will be waiting at the gate.
என் சகோதரி வாசலில் காத்துக் கொண்டிருப்பாள்.

Keywords :

By this time – இந்த நேரத்தில்
At this time – இந்த நேரத்தில்
by this time tomorrow – நாளை இந்த நேரத்தில்
by this time next week – அடுத்த வாரம் இந்த நேரத்தில்
by this time next month – அடுத்த மாதம் இந்த நேரத்தில்
by this time next year – அடுத்த ஆண்டு இந்த நேரத்தில்

during July – ஜூலை போது
during this week – இந்த வாரத்தில்
this time next week – இந்த நேரத்தில் அடுத்த வாரம்
at 8 a.m. tomorrow – நாளை காலை 8 மணிக்கு

all the day tomorrow – நாளை நாள் முழுவதும்
all the morning tomorrow – நாளை காலை முழுவதும்
all the evening tomorrow – நாளை மாலை முழுவதும்

from 6 p.m. to 7 p.m. tomorrow – மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நாளை.

Examples with Keywords :

1. He will be writing all the morning tomorrow.
நாளை காலை முழுவதும் அவன் எழுதிக் கொண்டிருப்பான்.
2. My grandfather will be reading the newspaper
at 8 a.m. tomorrow.
நாளை காலை 8 மணிக்கு என் தாத்தா செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார்.
3. You will be studying for the exam during
this week.
இந்த வாரத்தில் நீங்கள் தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருப்பீர்கள்.
4. My mother will be shopping tomorrow
for several hours.
என் அம்மா நாளை பல மணி நேரம் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பார்.
5. I shall be sitting in the train tomorrow at this time.
நான் நாளை இந்த நேரத்தில் ரயிலில் அமர்ந்திருப்பேன்.
6. You will be travelling to Delhi by this
time tomorrow.
நாளை இந்த நேரத்தில் நீங்கள் டெல்லிக்கு பயணப்பட்டுக் கொண்டிருப்பீர்கள்..
7. This time tomorrow, I shall be playing football.
இந்த நேரத்தில் நாளை நான் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பேன்.
8. We shall be waiting for you at 9 a.m. tomorrow.
நாளை காலை 9 மணிக்கு உங்களுக்காக காத்திருப்போம்.

‘When’ – வரும் போது...

              அடுத்தடுத்து இரண்டு செயல்கள் நடைபெறுதலைக் கூறும் போது, நாம் அந்த இரண்டு வாக்கியங்களைச் சேர்க்கும் வார்த்தையாக சில நேரங்களில் ‘when’ என்பதைப் பயன்படுத்துவோம்.

அவ்வாறு Future Continuous Tense – ல் when வரும்போது…

1] நாம் குறிப்பிடும், எதிர்காலத்தில் நடந்துகொண்டே இருக்கும் செயலை Future Continuous Tense லும்,

2]  மற்றொரு செயலை Simple Present Tense – லும் கூறவேண்டும்.

Examples :

  • When you arrive, I shall be sitting in the park.
    நீங்கள் வரும்போது, நான் பூங்காவில் அமர்ந்து கொண்டிருப்பேன்
  •         I shall be sitting in the park – நான் பூங்காவில் அமர்ந்து கொண்டிருப்பேன் [ Future Continuous Tense ]
  •        When you arrive – நீங்கள் வரும்போது [ Simple Present Tense ]
  • So ‘ When you arrive, I shall be sitting in the park.’
1] When I go home, my children will be reading.
நான் வீட்டுக்குப் போகும் போது, என் பிள்ளைகள் படித்துக் கொண்டிருப்பார்கள்.
2] When Raj come to his house, they will be waiting for him.
ராஜ் அவன் வீட்டுக்கு வரும்போது அவனுக்காகக் காத்துக் கொண்டிருப்பார்கள்.
3] When you return, we shall be waiting here.
நீங்கள் திரும்பும்போது, நாங்கள் இங்கே காத்திருப்போம்.
4] When the owner see, they will be working
in that field.
உரிமையாளர் பார்க்கும் போது, அவர்கள் அந்த துறையில் வேலை கொண்டிருப்பார்கள்.

Exercises: [ பயிற்சிகள் ]

1] This time tomorrow, they ________ [ travel ]
to London.
இந்த நேரத்தில் நாளை, அவர்கள் பயணம் செய்து கொண்டிருப்பார்கள்.
2] Sarathy _______ (wait) for us at the appointed hour tomorrow.
சாரதி நாளை குறிப்பிட்ட நேரத்தில் எங்களுக்காக காத்துக் கொண்டிருப்பார்.
3] We _______ [ watch ] the news at 10pm.
இரவு 10 மணிக்கு செய்திகளைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
4] When they are in Spain, they _______ [ have ] a great time.
அவர்கள் ஸ்பெயினில் இருக்கும்போது, அவர்கள் ஒரு சிறந்த நேரத்தைக் கொண்டிருப்பார்கள்.
5] She _______ [ eat ] her dinner this time.
அவள் இந்த நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டிருப்பாள்.
6] Sam _______ [ come ] from US tonight.
சாம் இன்று இரவு அமெரிக்காவில் இருந்து வந்து கொண்டிருப்பார்.
7] We _______ [ sail ] in an hour.
நாங்கள் ஒரு மணி நேரத்தில் படகோட்டி விடுவோம்.
8] At this time tomorrow, I _______ [ leave ] here.
நாளை இந்த நேரத்தில், நான் இங்கிருந்து கிளம்பிக் கொண்டிருப்பேன்.
9] Deena _______ [ play ] tennis at 10 a.m. tomorrow.
நாளை காலை 10 மணிக்கு தீனா டென்னிஸ் விளையாடிக் கொண்டிருப்பார்.
10] When I reach there, it probably _______ (snow) there.
நான் அங்கு சென்றடையும் போது, அங்கு பனிப்பொழிவு இருக்கும்.
11] We _______ (enjoy) our holidays next month at Ooty.
அடுத்த மாதம் ஊட்டியில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருப்போம்.
12] I am sure the train _______ [ move ], when we arrive.
நாங்கள் வரும்போது, ரயில் நகர்ந்து கொண்டு இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

Answers [ பதில்கள் ] :

1] This time tomorrow, they will be travelling to London.

2] Sarathy will be waiting for us at the appointed hour tomorrow.

3] We shall be watching the news at 10pm.

4] When they are in Spain, they will be having a great time.

5] She will be eating her dinner this time.

6] Sam will be coming from US tonight.

7] We shall be sailing in an hour.

8] At this time tomorrow, I shall be leaving here.

9] Deena will be playing tennis at 10 a.m. tomorrow.

10] When I reach there, it probably will be snowing there.

11] We shall be enjoying our holidays next month at Ooty.

12] I am sure the train will be moving, when we arrive.

Tags,
tense in tamil,verbs in tamil,verbs and tense in tamil,what is verb in tamil,what is tense in tamil,types of tense in tamil,types of verbs in tamil,12 tenses in tamil,basic grammar in tamil,basic tense in english grammar in tamil,basic english grammar in tamil,all tenses in tamil,Future Continuous Tense in tamil, future tense in tamil,

Leave a Comment

Your email address will not be published.