Past Perfect Continuous Tense – in Tamil // tamilvazhikkatral

Past Perfect Continuous Tense [ அல்லது ] Past Perfect Progressive Tense

           இறந்த காலத்தில் நடந்து முடிந்த ஒரு செயலுக்கோ அல்லது நேரத்திற்கோ முன்பு வரை நடந்து கொண்டிருந்த ஒரு செயலை இந்த ‘Past Perfect Continuous Tense’ காட்டுகிறது.

          அதாவது நடந்த செயலுக்கு முன்னால் அது வரை நடந்து கொண்டிருந்த ஒரு செயலைக் கூறுவது ‘Past Perfect Continuous Tense’ ஆகும்.

தெளிவாக முழு விளக்கமும் காண கீழே உள்ள காணொளி பார்க்கவும்.

Past Perfect Continuous Tense Structure

Subject + [ had been + Verb +ing ] + Object

Examples :

1]  I had been living in chennai.
நான் சென்னையில் வசித்து வந்தேன்.
2]  I had been working at that company.
நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
3]  Mathan had been walking three miles a day.
மதன் ஒரு நாளைக்கு மூன்று மைல் நடந்து வந்தான்.
4]  somebody had been smoking here.
இங்கு யாரோ புகைபிடித்து கொண்டிருந்தனர்.
5]  You had been asking me.
நீங்கள் என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.
6]  We had been going to that temple.
நாங்கள் அந்தக் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம்.

keywords

before – முன்னால், முன்
because – அதனால், ஏனென்றால்
for – ஆக
since – முதலாக, இருந்து

Keywords - உடன் Examples :

1]  I had been working on this project for two weeks.
நான் இரண்டு வாரங்களாக இந்த திட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
2]  Dev had been looking this book since March.
தேவ் மார்ச் மாதத்திலிருந்து இந்தப் புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
3]  We had been going to that temple regularly.
நாங்கள் அந்த கோவிலுக்கு தவறாமல் சென்று வந்தோம்.
4]  I had been living in chennai before I moved to my native place.
நான் சொந்த ஊருக்கு செல்வதற்கு முன்பு சென்னையில் வசித்து வந்தேன்.
5]  Mathan had been walking three miles a day before he bought his cycle.
மதன் தனது சைக்கிளை வாங்குவதற்கு முன்பு ஒரு நாளைக்கு மூன்று மைல்கள் நடந்து கொண்டிருந்தார்.
6]  Satha was very tired, because she had been running for an hour.
ஒரு மணி நேரம் ஓடியதால் சதா மிகவும் சோர்வாக இருந்தாள்.

Leave a Comment

Your email address will not be published.