ஆங்கில இலக்கணத்தில் உள்ள Present Tense – ன் முக்கிய மற்றும் சிறப்பு வார்த்தைகள் [ Keywords ] பற்றி இத்தளத்தில் விளக்கம் காணலாம்.
ஒரு வாக்கியம் present tense தான் அதிலும் simple present tense என்று நாம் தெரிந்து கொள்வதற்காக, மற்றும் அப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் அமைப்பதற்காக நமக்கு உதவக்கூடிய சிறப்பு வார்த்தைகள் தான் Keywords
Present Tense Keywords : Keywords என்றால் முக்கிய வார்த்தைகள் அல்லது சிறப்புச் சொற்கள் என்று பொருள். அதாவது ஒரு வாக்கியத்தை அது என்ன tense என்று நாம் கண்டு கொள்ள, அதில் வைக்கப்பட்டு இருக்கும் தனித்தன்மை கொண்ட வார்த்தை என்பது ஆகும்.
அதாவது ஒரு புதிர் விளையாட்டில் கொடுக்கப் படும் ‘க்ளு’ [clue] என்று சொல்லப்படும் குறிப்பு [துப்பு] தான் அது. அத்தகைய பல சிறப்பு வார்த்தைகளை இங்கு காணலாம்.
Present Tense Keywords :
Every [day, month, week, weekend, year, hour, minite]
–ஒவ்வொரு [நாள், மாதம், வாரம், வாரஇறுதி, ஆண்டு, மணிநேரம், நிமிடம்]
Always – எப்போதும்
sometimes– சில நேரங்களில்
Never – ஒருபோதும்
frequently– அடிக்கடி
Daily – தினசரி
Generally– பொதுவாக
Usually – பொதுவாக
Seldom – எப்போதாவது
Regularly – தவறாமல் இந்த ஆங்கில வார்த்தைகள் எல்லாம் எந்தெந்த வாக்கியங்களில் வருகின்றனவோ அந்த வாக்கியங்கள் எல்லாம் present tense வாக்கியங்கள் என்று கொள்ளப்படும். இவை பொதுவாக ஆங்கில இலக்கண எடுத்துக்காட்டுகளிலும், மற்றும் வாழ்வில் நாம் நிகழ் கால வாக்கியங்களை கூறும் போதும் அந்த வாக்கியங்களின் இடையே நாம் பயன்படுத்துகிறோம். மேலும் அடிக்கடி நாம் பயன்படுத்தும் சிறப்பு வார்த்தைகளும் ஆகும். இவை தவிர மேலும் பல சிறப்பு வார்த்தைகள் present tense – ல் இருக்கின்றன. அவையாவன :
As usual– வழக்கம்போல்
In modern days – நவீன நாட்களில்
In these days– இந்த நாட்களில்
Normally – பொதுவாக
Now-a-days– இப்போதெல்லாம்
Occasionally – எப்போதாவது
Periodically– அவ்வப்போது
Rarely– அரிதாக
Scarcely – அரிதாகவே
Whenever – எப்பொழுதாயினும்
இவை எல்லாம் ஆங்கில இலக்கண எடுத்துக்காட்டுகளில் அவ்வளவாக இருக்காது, எனினும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகளில் கண்டிப்பாக இருக்கும் keywords ஆகும்.
உதாரணமாக :
They go to yoga class [ அவர்கள் யோகா வகுப்புக்கு செல்கிறார்கள் ]
இங்கு go என்ற வார்த்தை present tense அதாவது 1st form verb ஆகும்.
இந்த வார்த்தையை இங்கு அளிக்கப்பட்டு இருக்கும் keywords உடன் இணைத்து கூறினால் கீழ்க்கண்டவாறு வரும்.
They go to yoga classeveryday
[இங்கு everyday என்பது everyweek, everymonth, etc., என்றெல்லாம் வரலாம்.]
Theyalways goto yoga class
Sometimes theygoto yoga class
Theynever goto yoga class
Theygoto yoga class frequently
Theygoto yoga class daily
Generally theygoto yoga class
Usually they goto yoga class
Seldom they goto yoga class
Regularly theygoto yoga class
Theygo to yoga class as usual
In modern days theygo to yoga class
In these days theygo to yoga class
Theygo to yoga class narmally
Now-a-daystheygo to yoga class
Theygo to yoga classOccasionally
[ Occasionally – எப்போதாவது]
Theygo to yoga classPeriodically
[ Periodically – அவ்வப்போது]
TheyRarelygo to yoga class
TheyScarcelygo to yoga class
Wheneverthey meet, theygo to yoga class
இந்த keywords என்ற சிறப்பு வார்த்தைகளின் மூலம் நாம் அந்த வாக்கியங்கள் present tense தான் என்றும், simple present tense தான் என்றும் அறிந்து கொள்ளலாம்.
ஒரு வேலை keywords இல்லாமல் அந்த வார்த்தைகள் வந்தால் அது உலக உண்மைகளாகவோ, வழிமுறைகளைக் [ instructions ]கூறும் வார்த்தைகளாகவோ, கட்டளை வாக்கியமாகவோ, அல்லது எதிர்கால நிச்சய நிகழ்வாகவோ இருந்தால் அது present tense வாக்கியம் என்று கொள்ளப்படும். [ இது முந்தின பக்கத்தில் ‘விதிகள்’ என்ற தலைப்பில் கூறப்பட்டு உள்ளது.]
Present Tense Keywords : – Youtube Video :
Present Tense in Tamil / Keywords / Learning Tense – 4 / தமிழில்
Tags, ஆங்கில இலக்கணம் தமிழ் மொழியில், simple present tense in tamil, present tense rules in tamil, present tense keywords in tamil, tense in tamil, english grammar in tamil, tense in tamil meaning, tense in tamil and english, tense in tamil translation, types of tense in tamil, tense chart in tamil, tense chart tamil to english, tense class in tamil, tense tamil videos, what is tense, tense definition in tamil, english grammar tense in tamil, present tense rules in tamil, present tense keywords in tamil,