Present Tense in Tamil – Rules / விதிகள் / tamilvazhikkatral


  ஆங்கில இலக்கணத்தில் உள்ள Present Tense – ன் விதிகள் [rules] பற்றி இத்தளத்தில் விளக்கம் காணலாம்.

Present Tense விதிகள்  
Øதிரும்பத் திரும்ப நடைபெறும் செயல்கள்.
Øவழக்கமான செயல்கள்.
ØFact – என்று கூறப்படும் உண்மை நிலைகள்.
Øபழக்கவழக்கங்களாக உள்ள செயல்கள்.
Øபொதுவான உண்மைகள் உரைத்தல்.
Øஎப்போதுமே நடைபெறும் செயல்கள்.
Øஉலகளாவிய உண்மைகள் உரைத்தல். 
Øதிட்டமிடப்பட்ட, நிச்சயமாக எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்.

A] For repeated or regular actions in the present time period.   
[தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் அல்லது வழக்கமான செயல்களுக்கு.]


1] Siva ______ [ sleep ] eight hours every day.
 Siva sleeps eight hours every day.
 சிவா தினமும் எட்டு மணி நேரம் தூங்குகிறார்.

      அடைப்புக்குறிக்குள் இருக்கும் verb எப்போதும் 1st form – ஆக மட்டுமே இருக்கும்.

           Siva – ஒருமை என்பதால் ‘ s ‘ சேர்க்க வேண்டும். 

       2] I often _____ [return] my home by auto.

  I often return my home by auto.

  நான் அடிக்கடி என் வீட்டிற்கு ஆட்டோ மூலம் திரும்புவேன்
Ofter அடிக்கடி
        ‘ I ‘ –  வந்தால் அதனை பன்மையில் உள்ளதைப் போல கணக்கிட்டுக் கொண்டு அடுத்து வரும் verb – ல் ‘ S ‘ சேர்க்கக் கூடாது.
      3]  I _____ [play] football on Saturdays.

              I play football on Saturdays.
நான் சனிக்கிழமைகளில் கால்பந்து விளையாடுகிறேன்.
      4] Once a year you ______ [fly] back to visit my family in Chennai.
         Once a year you fly back to visit my family in Chennai.

       வருடத்திற்கு ஒரு முறை சென்னையில் உள்ள உனது குடும்பத்தினரைப் பார்க்க நீ மீண்டும் பறந்து வருகிறாய்.
You‘ –  வந்தால் அதனை பன்மையில் உள்ளதைப் போல கணக்கிட்டுக் கொண்டு அடுத்து வரும் verb – ல் ‘ S ‘ சேர்க்கக் கூடாது.

B] For habits : பழக்கங்களுக்கு

   1]  They ______ [get up] early every day.

            They get up early every day.

      அவர்கள் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்துவிடுவார்கள்.
They பன்மை. அதனால் verb ல் ‘S’ சேர்க்க தேவையில்லை.
  2] My baby ______ [brush] her teeth twice a day.
          My baby brushes her teeth twice a day.

   என் குழந்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குகிறது.
          twice a day – ஒரு நாளுக்கு இரு தடவைகள்.
      My baby – ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்.
Brushபல் துலக்குதல்
 sh – ல் முடிந்துள்ளது. அதனால் ‘es’ சேர்க்க வேண்டும்.


குறிப்புகள் :
1 ]  ஒருமை                         
      He, She, It, Name – Verb உடன் ‘S’ சேர்

     பன்மை 

   I, You, We, They – Verb உடன் ‘S’ சேர்க்க வேண்டாம்.

[ I மற்றும் You ஆகிய இரண்டையும் பன்மை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.]

2] For verbs that end in -O, -CH, -SH, -SS, -X, or -Z we add -ES in the third person.

          -O, -CH, -SH, -SS, -X, அல்லது –Z இல் முடிவடையும் வினைச்சொற்கள் எனில் verb – ல்  ‘es’ ஐ சேர்க்கிறோம்.
உதாரணமாக :
    go – goes  [ போ]
    catch – catches  [பிடி]
    wash – washes  [கழுவுதல்]
   miss – misses  [தவறவிடு]
   fix – fixes   [சரி செய்]
   buzz – buzzes  [ரீங்காரம் செய்]

   3] We _____ [travel] to our country house every year.
             We travel to our country house every year.
          நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் கிராமப்புற வீட்டிற்கு பயணம் செய்கிறோம்.
    We – பன்மை. அதனால் ‘S’ – சேர்க்க வேண்டாம்.
C]  For things that are always / generally true.
[எப்போதும் / பொதுவாக உண்மையாக இருக்கும் விஷயங்களுக்கு]
    1] It _____  [rain] a lot in winter.
              It rains a lot in winter.

     குளிர்காலத்தில் நிறைய மழை பெய்யும்

   It – ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்.


    2]   The Queen of England _____  [live] in Buckingham Palace.
         The Queen of England lives in Buckingham Palace.

 இங்கிலாந்து ராணி பக்கிங்ஹாம் அரண்மனையில் வசிக்கிறார்.
The Queen of England ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்

   3]  They ______ [speak] English at work.
           They speak English at work.
   அவர்கள் வேலையில் ஆங்கிலம் பேசுகிறார்கள்.
They பன்மை. அதனால் verb ல் ‘S’ சேர்க்க தேவையில்லை.

D] Fact – என்று கூறப்படும் உண்மை நிலைகள் 
        
   1]  I _____ [live] in Chennai.
             I live in Chennai.     நான் சென்னையில் வசிக்கிறேன்.

  2]  The President of The USA  ______ [live] in The White House.
           The President of The USA lives in The White House.
அமெரிக்காவின் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் வசிக்கிறார்.
The President of The USA – ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்

  3]  A dog ______ [have] four legs.
               A dog has four legs.
   ஒரு நாய் நான்கு கால்கள் கொண்டது.
Have – என்பது தனி verb ஆக வந்தால் அது ஒரு முழுமையான verb ஆகும்.  

E]  World truths or universal truth
[ இயற்கையின் விதிகள் மற்றும் உலகம் இருக்கும் விதம் பற்றிய அறிக்கைகள் ]
     1]  The sun ______ [set] in the West.
           The sun sets in the West.
  மேற்கில் சூரியன் மறைகிறது.
   The sun – ஒருமை‘S’ – சேர்க்கவேண்டும்
  Set – என்பதற்கு அமை, பொறுத்து என்று வேறு அர்த்தங்கள் இருக்கின்றன. இங்கு மறைதல் என்று பொருள் வரும்.

    2]  Water ______ [boil] at 100° Celsius.
           Water boils at 100° Celsius.
   100 ° செல்சியஸில் தண்ணீர் கொதிக்கிறது.
Waterஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்

   3] Trees _____ [lose] their leaves in the fall.
          Trees lose their leaves in the fall.
 மரங்கள் இலையுதிர்காலத்தில் இலைகளை இழக்கின்றன.
  Treesபன்மை. அதனால் ‘S’ சேர்க்க தேவையில்லை

    4]   Wood ______ [float] on water.
              Wood floats on water.
  மரம் தண்ணீரில் மிதக்கிறது.
  Wood – ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்


F] to refer to future events that are scheduled :

[திட்டமிடப்பட்ட எதிர்கால நிகழ்வுகளைக் குறிக்க]


    1]  Hurry up! The train _____ [depart] in 10 minutes.

          Hurry up! The train departsin 10 minutes.

     சீக்கிரம்! ரயில் 10 நிமிடங்களில் புறப்படுகிறது.
The trainஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்

    2] There’s no need to hurry.  
       The train doesn’t  ________ [leave] for another 30 minutes.
         The train doesn’t leave for another 30 minutes.
      அவசரப்படத் தேவையில்லை. ரயில் இன்னும் 30 நிமிடங்களுக்கு புறப்படுவதில்லை.
The trainஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்
                     doesn’t leaveஎன்பது verb பகுதி ஆகும். இதில் do என்ற verb –ல் ‘es’ சேர்ப்பதால் leave என்பதில் ‘es’ சேர்க்கத் தேவையில்லை. 

  3]  She _____ [have] a piano lesson after school today.
                She has a piano lesson after school today.
இன்று பள்ளிக்குப் பிறகு அவளுக்கு பியானோ பாடம் உள்ளது.
She ஒருமை. ‘S’ – சேர்க்கவேண்டும்.

Present Tense Keywords: Click Here

Present Tense – Youtube Video :

Present Tense in Tamil / Rules with Examples / Learning Tense – 3 / தமிழில்

**********************

Youtube – 
[ Tense பற்றிய playlists – இணைப்பு கீழே ]

**********************

Tags,
       ஆங்கில இலக்கணம் தமிழ் மொழியில், simple present tense in tamil, present tense rules in tamil, present tense keywords in tamil, tense in tamil, english grammar in tamil, tense in tamil meaning, tense in tamil and english, tense in tamil translation, types of tense in tamil, tense chart in tamil, tense chart tamil to english, tense class in tamil, tense tamil videos, what is tense, tense definition in tamil, english grammar tense in tamil, present tense rules in tamil, present tense keywords in tamil, 













Leave a Comment

Your email address will not be published.