
Future Perfect Continuous Tense பற்றிய ஆங்கில இலக்கணம்
Future Perfect Continuous Tense பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும். இது ஆங்கில இலக்கணத்தை வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உங்களுக்கு இருக்கும்.Tense in Tamil
ஆங்கில இலக்கணம் - Tense in Tamil
Future Perfect Continuous Tense
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலநேரம் வரை நடந்து கொண்டே இருக்கும் ஒரு செயல். அதாவது ஒரு செயல் எதிர்காலத்தில் எவ்வளவு காலம் நடந்து கொண்டிருக்கும் என்பதில் கவனம் செலுத்துகிறது.
[ An action that will have been in progress for a period of time up to a specific point in the future. This Tense focuses on how long an action will continue in the future.]
இது குறித்த அனைத்து விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube – வீடியோவைக் காணுங்கள்.
Future Perfect Continuous in Tamil – 24 / Learning Tense / விளக்கம் தமிழில் #tamilvazhikkatral

Looking back at the Duration of that Activity.
அந்த செயல்பாட்டின் காலத்தை திரும்பிப் பார்த்தல்.
Tense in Tamil அதாவது கடந்த காலத்திலோ, நிகழ்காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ எப்போதாவது தொடங்கியிருக்கும் ஒரு செயல்…….
வருங்காலத்தில் ஏதேனும் ஒரு காலநேரத்திலோ அல்லது மற்றொரு செயலுக்கு முன்னரோ தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், அதை இந்த tense ல் குறிப்பிடலாம்.
The Future Perfect Continuous, சில நேரங்களில் The Future Perfect Progressive Tense என்றும் அழைக்கப்படுகின்றது.
Future க்கு – will / shall
Perfect க்கு – have / has / had [ இதில் has, had future க்கு வராது.]
Perfect க்கு have + 3rd form தான் வரும்
Continuous க்கு – ‘ing’ form
இதில் Perfect ம் Continuous ம் இரண்டும் சேராது.
have + Ving வராது.
அதனால் இரண்டுக்கும் இடையில்
‘been’ என்ற word ஐ இணைக்க வேண்டும்.
Have been + Ving
சாதாரண வாக்கியம்
Subject + Verb + Object – என்று இருக்கும்.
இதில் Verb பகுதியில்
will have been + ‘ing’ form
shall have been + ‘ing’ form என்று வரும்.
உதாரணம்
will have been working
வேலை செய்து கொண்டிருப்பார்கள்
shall have been learning
கற்றுக்கொண்டிருக்க வேண்டும்
will have been discussing
விவாதித்துக் கொண்டிருப்பார்கள்
Simple Examples :
He will have been building this house.
அவன் இந்த வீட்டைக் கட்டிக் கொண்டிருப்பான்.
She will have been cooking for 2 hours.
அவள் 2 மணி நேரம் சமைத்துக்கொண்டிருப்பாள்.
Rama will have been singing for half an hour.
ரமா அரை மணி நேரம் பாடிக்கொண்டே இருப்பார்.
I shall have been writing this essay for one hour.
நான் இந்தக் கட்டுரையை ஒரு மணி நேரம் எழுதிக் கொண்டிருப்பேன்.
They will have been digging in the ground.
அவர்கள் நிலத்தில் தோண்டிக் கொண்டிருப்பார்கள்.
We shall have been swimming here for 3 hours.
நாங்கள் இங்கு 3 மணி நேரம் நீந்திக் கொண்டிருப்போம்.
குறிப்பிட்ட நேரம் அல்லது காலம் + வாக்கியம்
வாக்கியம் என்ற பகுதியில்..
நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல் அதாவது
will have been + Ving
shall have been + Ving ஐ பயன்படுத்தி இருந்தால் அது Future Perfect Continuous ஆகும்.
‘குறிப்பிட்ட நேரம் அல்லது காலம்’ – ஐக் குறிப்பிட…
for 2 hours / 2 மணி நேரத்திற்கு
for the whole day / நாள் முழுவதும்
for 3 hours by 6 pm / மாலை 6 மணி வரை 3 மணி நேரமாக
for the rest of the time / மீதமுள்ள நேரத்திற்கு
by June / ஜூன் மாதத்திற்குள்
by next year / அடுத்த ஆண்டுக்குள்
by Deepavali / தீபாவளிக்குள்
By the time _________ / ________ அந்த நேரத்திற்குள்
By the time I get there,
By the time you arrive,
By the time the teacher enter,
since 2022 / 2022 முதல்
before you come / நீங்கள் வருவதற்கு முன்
தமிழில் சொல்லும் போது….
நான் ஓய்வு பெறும்போது, 40 ஆண்டுகளாக இந்தத் துறையில் பணியாற்றி இருப்பேன்.
நவம்பரில், நான் எனது நிறுவனத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தவன். ஆவேன்.
ஐந்து மணிக்கு, நான் முப்பது நிமிடங்கள் காத்திருந்தவன் ஆவேன்.
கீழ் காணும் சூழ்நிலைகள் :
1] எவ்வளவு காலமாக ஏதோ ஒரு செயல் நடக்கிறது?…
how long something has been happening…
2] எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுக்கான காரணம்.
the cause of a possible future result…
3] முடிக்கப்பட்ட எதிர்கால நடவடிக்கையின் வேலை நடக்கின்ற காலம்…
the duration of a completed future action…
1] எவ்வளவு காலமாக ஏதோ ஒரு செயல் நடக்கிறது? :
how long something has been happening…
By the time I get there, she will have been waiting for over an hour
நான் அங்கு வருவதற்குள், அவள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்துகொண்டிருப்பாள்.
They will have been playing football in that field before you reach.
நீங்கள் வந்தடைவதற்குள் அவர்கள் அந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
2] எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுக்கான காரணம் :
the cause of a possible future result…
She will miss her bus because she will have been talking for so long.
அவள் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருப்பதால் அவள் பேருந்தைத் தவறவிடுவாள்.
Rishi will get 1st rank, because he will have been working hard for this one year.
ரிஷிக்கு 1வது ரேங்க் கிடைக்கும், ஏனென்றால் இந்த ஒரு வருடம் கடுமையாக உழைத்துக் கொண்டு இருப்பான்.
3] முடிக்கப்பட்ட எதிர்கால நடவடிக்கையின் வேலை நடக்கின்ற காலம் :
the duration of a completed future action…
By the end of the game, he will have been playing for 90 minutes.
ஆட்டத்தின் முடிவில், அவர் 90 நிமிடங்கள் விளையாடியிருப்பார்.
He will have been driving for 8 hours by the end of the day.
நாள் முடிவதற்குள் 8 மணி நேரம் ஓட்டி இருப்பார்.
Examples :
Ragav will have been waiting for more than five hours by the time Viki arrives.
விக்கி வருவதற்குள் ராகவ் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருந்திருப்பான்.
Remya will have been working at the company for fifteen years in 2026.
ரம்யா 2026 இல் பதினைந்து வருடங்கள் நிறுவனத்தில் பணிபுரிவார்.
Next month, I will have been following a diet for three months.
அடுத்த மாசம், மூணு மாசம் டயட் ஃபாலோ பண்ணுவேன்.
In November, Devika will have been teaching at this school for three years.
நவம்பரில், தேவிகா இந்த பள்ளியில் மூன்று ஆண்டுகள் பாடம் நடத்துவார்.
குறிப்பு : Future Perfect Continuous Tense ல்
காண்ணால் பார்க்காத உணரக்கூடிய செயல்கள் இந்த tense ல் வராது.
Nonaction Verbs Do Not Use the Future Perfect Continuous
உதாரணம் : known, seem, read
உதாரணம்
know /தெரியும்
seem /பார்வைக்குத் தோன்றுவது
read /படி
It seems, she can’t come.
அவளால் வர முடியாது போலிருக்கிறது.
She seemed an ideal person.
அவள் ஒரு சிறந்த நபராகத் தெரிந்தாள்.
தீபாவளி வந்தால், நான் உன்னை ஒரு வருடமாக அறிவேன்.
By Diwali, I will have known you for a year. – சரி
By Diwali, I will have been knowing you for a year. – தவறு
இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் நான் ஐந்து புத்தகங்களைப் படித்திருப்பேன்.
I will have read five books by this Sunday. – சரி
I will have been reading five books by this Sunday. – தவறு
Knowing, reading
ஆகிய உணரக்கூடிய Verb – கள்
Perfect Continuous Tense களில் மட்டும் வராது.
பிற இடங்களில் வரும்.
Future Perfect Continuous Tense & Future Perfect Tense வேறுபாடு
Difference
Future Perfect Continuous Tense – தொடர்ச்சியான கால அளவை வலியுறுத்துகிறது
Future Perfect Tense – ஒரு செயலைக் குறிக்கிறது.
By next month, I will have been working here for two years
அடுத்த மாதம் வந்தால், நான் இங்கு வேலை செய்து இரண்டு வருடங்கள் ஆகிறது. FUTURE PERFECT CONTINUOUS
By next month, I will have worked here for two years.
வரும் மாதம் வந்தால், நான் இங்கு இரண்டு வருடங்கள் வேலை செய்திருப்பேன். FUTURE PERFECT
பயிற்சிகள் :
1] She ________ the Boxing for 5 years. [ play ]
அவள் 5 வருடங்களாக குத்துச்சண்டை விளையாடி இருப்பாள்.
2] He ________ for us for over an hour. [ wait ]
அவன் நமக்காக ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பான்.
3] By the time, I ________ dinner. [ cook ]
அந்த நேரத்தில், நான் இரவு உணவை சமைத்துக்கொண்டிருப்பேன்.
4] Deva ________ for 6 hours by the end of the day. [ drive ]
நாள் முடிவதற்குள் தேவா 6 மணி நேரம் வாகனம் ஓட்டியிருப்பார்.
5] We ________ in this theater for 3 hours in Sunday. [ sit ]
ஞாயிற்றுக்கிழமை 3 மணி நேரம் இந்த தியேட்டரில் உட்கார்ந்திருப்போம்
6] Thay ________ for hours by the time the guests arrive. [ decorate ]
விருந்தினர்கள் வருவதற்குள் அவர்கள் மணிக்கணக்கில் அலங்கரித்துக் கொண்டிருப்பார்கள்.
7] By the time the event begins, they ________ it for months. [ plan ]
நிகழ்வு தொடங்கும் நேரத்தில், அவர்கள் பல மாதங்களாக அதைத் திட்டமிட்டிருப்பார்கள்.
8] By the end of the day, Laxmi ________ for 12 hours. [ work ]
நாள் முடிவதற்குள், லட்சுமி 12 மணி நேரம் வேலை செய்திருப்பாள்.
9] By the time the race ends, Arjun ________ for 5 hours. [ run ]
பந்தயம் முடியும் போது, அர்ஜுன் 5 மணி நேரம் ஓடியிருப்பான்.
10] They ________ their project for 10 days. [ prepare ]
அவர்கள் 10 நாட்களாக தங்கள் திட்டத்தைத் தயாரித்து வருவார்கள்.
11] The Head Manager ________ us for hours before you come. [ scold ]
நீங்கள் வருவதற்கு முன்பே தலைமை மேலாளர் எங்களை பல மணிநேரம் திட்டிக்கொண்டிருப்பார்.
Answers :
1] She will have been playing the Boxing for 5 years.
2] He will have been waiting for us for over an hour.
3] By the time, I will have been cooking dinner.
4] Deva will have been driving for 6 hours by the end of the day
5] We will have been sitting in this theater for 3 hours in Sunday.
6] Thay will have been decorating for hours by the time the guests arrive.
7] By the time the event begins, they will have been planning it for months.
8] By the end of the day, Laxmi will have been working for 12 hours.
9] By the time the race ends, Arjun will have been running for 5 hours.
10] They will have been preparing their project for 10 days.
11] The Head Manager will have been scolding us for hours before you come.
இங்கு வரும் Verb களின் சார்ட் :
சமை – cook cooked cooked
அலங்கரி – decorate decorated decorated
விவாதி – discuss discussed discussed
ஓட்டு – drive drove driven
பின்பற்று – follow followed followed
கற்றுக்கொள் –
Learn learned/learnt learned/learnt
விளையாடு – play played played
தயார்செய் – prepare prepared prepared
ஓடு – run ran run
திட்டு – scold scolded scolded
உட்கார் – sit sat sat
கற்பி – teach taught taught
காத்திரு – wait waited waited
வேலை செய் – Work worked worked
Tense in Tamil