
Future Perfect Tense பற்றிய ஆங்கில இலக்கணம்
Future Perfect Tense பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும். இது ஆங்கில இலக்கணத்தை வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உங்களுக்கு இருக்கும்.
ஆங்கில இலக்கணம் - Tense
Future Perfect Tense
எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன் அல்லது வேறு ஒரு குறிப்பிட்ட செயலுக்கு முன் முடிக்கப்படும் ஒரு செயலை எடுத்துக் கூற இந்த tense உதவுகிறது.
This tense helps to express an action that will be completed before a specific time in the future or before another specific action.
இது குறித்த அனைத்து விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube – வீடியோவைக் காணுங்கள்.
Future Perfect Tense in Tamil - 23 / Learning Tense / விளக்கம் தமிழில் #tamilvazhikkatral
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு முடிவுற்ற செயல்
– 1] எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னர்
அல்லது
– 2] எதிர்காலத்தில் நடக்கும் மற்றொரு செயலுக்கு முன்னர்
நடந்திருக்க வேண்டும்.
அல்லது…
* குறிப்பிட்ட நேரம்
அல்லது
* குறிப்பிட்ட மற்றொரு செயல் – க்கு
– முன்னரே நடந்திருக்கும் ஒரு செயல்
Future க்கு – will / shall
Perfect க்கு – have / has / had
இதில் has, had future க்கு வராது.
அதனால்
will have + 3rd form
shall have + 3rd form
Subject + Verb + Object
Verb பகுதியில்
பொதுவாக will have + 3rd Form மட்டும் வரும்.
உதாரணம் – 1
will have + finished
I will have finished my school life.
நான் என் பள்ளி வாழ்க்கையை முடித்திருப்பேன்.
உதாரணம் – 2
I will have eaten dinner before you arrive
நீ வருவதற்கு முன்பே நான் இரவு உணவு சாப்பிட்டிருப்பேன்
எல்லா subject க்கும் will போடலாம்.
1] ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே :
என்பதை வாக்கியத்தில் ஆங்கிலத்தில் கீழ் உள்ளவாறு எழுதலாம்
by the time / அந்த நேரத்தில்
by then / அதற்குள்
by 5:30 / 5:30க்குள்
by Friday / வெள்ளிக்கிழமைக்குள்
by next _____week/month/year/summer / அடுத்த _____வாரம் /மாதம் /ஆண்டு /கோடைக்குள்
உதாரணம்
I will have come to India by next month.
அடுத்த மாதத்திற்குள் இந்தியா வந்துவிடுவேன்.
Dev will have started to his work by this week end.
இந்த வார இறுதியில் தேவ் தனது வேலையைத் தொடங்குவார்.
They will have built their house by next July.
வரும் ஜூலை மாதத்திற்குள் வீடு கட்டி விடுவார்கள்.
2] மற்றொரு செயலுக்கு முன் :
before + ஏதேனும் ஒரு செயல்
தொடர்புடைய ஒரு simple present tense வாக்கியம் வரலாம்.
before I finish /நான் முடிக்கும் முன்
before we eat /நாம் சாப்பிடுவதற்கு முன்
before you come /நீ வருவதற்கு முன்
before he sees /அவர் பார்க்கும் முன்
before she plays /அவள் விளையாடும் முன்
before they watch /அவர்கள் கவனிக்கும் முன்
உதாரணம்
They will have left for their home town before we arrive.
நாங்கள் வருவதற்குள் அவர்கள் சொந்த ஊருக்குப் போய்விடுவார்கள்.
The meeting will have started by the time Ram gets here.
ராம் இங்கு வருவதற்குள் கூட்டம் தொடங்கியிருக்கும்.
The kids will have slept before their uncle come.
மாமா வருவதற்குள் குழந்தைகள் தூங்கியிருப்பார்கள்.
மேலும் எடுத்துக்காட்டுகள்
1] I think all the plants will have grown before I return.
நான் திரும்பி வருவதற்குள் எல்லா செடிகளும் வளர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
2] Seetha will have arrived by 4 p. m.
சீதா மாலை 4 மணிக்குள் வந்திருப்பாள்.
3] By that time, they will have won the match.
அதற்குள் அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றிருப்பார்கள்.
4] In the next few years, our city will have changed.
அடுத்த சில ஆண்டுகளில், நமது நகரம் மாறிவிடும்.
Exercises / பயிற்சிகள் :
1] I ________ by then. [leave ]
அதற்குள் நான் கிளம்பி விடுவேன்.
2] You ________ the bill by the time the item arrives. [receive ]
பொருள் வருவதற்குள் நீங்கள் பில் பெற்றிருப்பீர்கள்.
3] He ________ all about it by Monday. [forget ]
திங்கட்கிழமைக்குள் அனைத்தையும் மறந்துவிடுவார்.
4] By the time train arrived, they ______ there. [reach]
ரயில் வருவதற்குள், அவர்கள் அங்கு சென்றடைவார்கள்.
5] Next May, he _______ 30. [turn]
அடுத்த மே மாதம், அவருக்கு 30 வயது.
6] By 5:00, I ______ my project. [submit]
5:00 மணிக்குள், எனது திட்டத்தைச் சமர்ப்பித்துவிடுவேன்.
7] Kannan _______ his work before his manager looks. [complete]
மேலாளர் பார்ப்பதற்குள் கண்ணன் தன் வேலையை முடித்திருப்பான்.
8] The kids _______ their homework before their mother come home. [finish]
அம்மா வீட்டிற்கு வருவதற்குள் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை முடித்துவிடுவார்கள்
9] She ______ her dress before you arrive. [choose]
நீங்கள் வருவதற்கு முன்பே அவள் ஆடையைத் தேர்ந்தெடுத்திருப்பாள்
10] By Sunday, Venu _____ his car. [buy]
ஞாயிற்றுக்கிழமைக்குள், வேணு தனது காரை வாங்கியிருப்பார்
Verbs – v1 v2 v3
leave – left – left / விட்டுவிடு
receive – received – received / பெறு
forget – forgot – forgotten / மறந்துவிடு
reach – reached – reached / அடைதல்
turn – turned – turned / திரும்பு
submit – submitted – submitted / சமர்ப்பி
complete – completed – completed / நிறைவு
finish – finished – finished / முடிவு
choose – chose – chosen / தேர்வுசெய்
buy – bought – bought / வாங்கு
Answers / பதில்கள் :
1] I will have left by then.
அதற்குள் நான் கிளம்பி விடுவேன்.
2] You will have received the bill by the time the item arrives.
பொருள் வருவதற்குள் நீங்கள் பில் பெற்றிருப்பீர்கள்.
3] He will have forgotten all about it by Monday.
திங்கட்கிழமைக்குள் அனைத்தையும் மறந்துவிடுவார்.
4] By the time train arrived, they will have reached there.
ரயில் வருவதற்குள், அவர்கள் அங்கு சென்றடைவார்கள்.
5] Next May, he will have turned 30.
அடுத்த மே மாதம், அவருக்கு 30 வயது.
6] By 5:00, I will have submitted my project.
5:00 மணிக்குள், எனது திட்டத்தைச் சமர்ப்பித்துவிடுவேன்.
7] Kannan will have completed his work before his manager looks.
மேலாளர் பார்ப்பதற்குள் கண்ணன் தன் வேலையை முடித்திருப்பான்.
8] The kids will have finished their homework before their mother come home
அம்மா வீட்டிற்கு வருவதற்குள் குழந்தைகள் வீட்டுப்பாடங்களை முடித்துவிடுவார்கள்
9] She will have chosen her dress before you arrived.
நீங்கள் வருவதற்கு முன்பே அவள் ஆடையைத் தேர்ந்தெடுத்திருப்பாள்.
10] By Sunday, Venu will have bought his car.
ஞாயிற்றுக்கிழமைக்குள், வேணு தனது காரை வாங்கியிருப்பார்
Tags,
tense in tamil,verbs in tamil,verbs and tense in tamil,what is verb in tamil,what is tense in tamil,types of tense in tamil,types of verbs in tamil,12 tenses in tamil,basic grammar in tamil,basic tense in english grammar in tamil,basic english grammar in tamil,all tenses in tamil,Future Continuous Tense in tamil, future tense in tamil, future perfect tense in tamil,