Future Tense in Tamil – விளக்கம் // Learning Tense / tamilvazhikkatral

Future Tense பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும்.

Future Tense :

            இதுவரை நடக்காத விஷயங்கள் மற்றும் செயல்களைப் பற்றி பேசப் பயன்படுத்தப்படும் ஒரு வினைச்சொல் ‘future tense’ ஆகும். [ The simple future is a verb tense that’s used to talk about things that haven’t happened yet.]

அதாவது, எதிர்கால செயல்பாடு அல்லது எதிர்கால நிலை பற்றி கூறும் போது பயன்படுத்தும் ஒரு வினைச்சொல் future tense’ ஆகும்.

Future Tense – ல் எதிர் காலத்தை அடையாளப்படுத்தும் வார்த்தைகள்.  will   மற்றும்   shall

      ஏதேனும் ஒரு Verb – உடன் will அல்லது shall என்ற இரண்டு அடையாளங்களைச் சேர்ப்பதால் அதனை தாங்கி நிற்கும் வாக்கியம் எதிர்காலத்தைக் குறிக்கும் வாக்கியமாக மாறிவிடும்.

இது குறித்த அனைத்து விளக்கங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள Youtube – வீடியோவைக் காணுங்கள். 

Future Tense in Tamil - 20 // ஒரு அறிமுக விளக்கம் // Learning Tense / தமிழில்

_______________________________

Future Simple tense structure :

Will / Shall + 1st form Verb

Will : கருத்துகள் :

  • அனைத்து subject – க்கும் மிகவும் பொதுவானது…
I, We, You, They, He, She, It,  Name
I will eat
We will eat
You will eat
They will eat
He will eat
She will eat
It will eat
Raj will eat
  • நவீன ஆங்கிலத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. [ அமெரிக்க ஆங்கிலத்தில் ]

shall : கருத்துகள் :

  • மிகவும் அரிதாக பயன்படுத்தப்படுக்கிறது.
  • பொதுவாக “I,  We” – க்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

I,  We,  You, They, He, She, It,  Name

I shall eat
We shall eat

  • அவ்வாறு இல்லாமல் “I,  We” தவிர  மற்ற இடங்களில் shall பயன்படுத்த வேண்டும் எனில் நாம் சொல்ல வரும் எதிர்காலம் குறித்த வாக்கியங்கள் அழுத்தமான உணர்வைக் குறிப்பவையாக இருக்கும்.
You will do  –  நீங்கள் செய்வீர்கள்
You shall do  –  நீங்கள் செய்ய வேண்டும். [ இந்த வகையை எப்போதும் பயன்படுத்துவது இல்லை. ]
  • பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் மிகவும் பொதுவானது என்றாலும்…
    அமெரிக்க ஆங்கிலத்தில் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.

Be : இரு [ இருத்தல் நிலையை கூறுதல் ] :

Present Tense – am, is, are
I am a teacher
[நான் ஆசிரியராக இருக்கிறேன்]

Past Tense – was, were
I was a teacher
[நான் ஆசிரியராக இருந்தேன்]

அது போல future tense – க்கும்
will be – இருக்கும், இருப்பேன்
shall be – இருப்பேன்
[ ஆனால் present, past போல இவை ‘Be form’ words – ல் சேராது.

I shall be a teacher
நான் ஆசிரியராக இருப்பேன்
We shall be the teacher
நாம் ஆசிரியராக இருப்போம்
You will be a teacher
நீங்கள் ஆசிரியராக இருப்பீர்கள்
He will be a teacher
அவர் ஒரு ஆசிரியராக இருப்பார்
She will be a teacher
அவள் ஒரு ஆசிரியராக இருப்பாள்
Dev will be a teacher
தேவ் ஒரு ஆசிரியராக இருப்பார்

எதிர்கால வினைச்சொல்லைப் பயன்படுத்தாமல் எதிர்காலத்தைப் பற்றி பேச வேறு வழிகள் உள்ளன :

1] Future arrangements [ எதிர்கால ஏற்பாடுகளை ] பற்றி பேச present continuous பயன்படுத்துதல்:

           எதிர்காலத்திற்கான திட்டங்களைப் பற்றி பேசும் போதோ அல்லது எதிர்கால நிகழ்வுகளுக்காக மக்கள் [ அந்த மக்கள் நாம் தான் ] செய்த குறிப்பிட்ட ஏற்பாடுகள் பற்றி பேசும் போதோ ‘present continuous tense’ பயன்படுத்தப்படுகிறது.

1] I am meeting Dev at the airport.
நான் தேவ்-வை விமான நிலையத்தில் சந்திக்கிறேன்.
[ தேவ்-ம் நானும் இது பற்றி பேசி இருக்கிறோம்.]
2] I am leaving tomorrow.
நான் நாளை புறப்படுகிறேன்.
[ நான் டிக்கட் கூட எடுத்துவிட்டேன்.]
3] We are having a staff meeting this friday.
இந்த வெள்ளிக்கிழமை ஊழியர் கூட்டத்தை நடத்துகிறோம்.
[ ஏற்கனவே அனைத்து ஊழியர்களுக்கும் இந்த ஏற்பாடு தெரியும்.]
4] I am playing football tomorrow.
நான் நாளை கால்பந்து விளையாடுகிறேன்.

2] [ scheduled events ] திட்டமிடப்பட்ட நிகழ்வுகளைப் பற்றி பேச simple present பயன்படுத்துதல்:

ஒரு அட்டவணை அல்லது கால அட்டவணை [ schedule or timetable ] யின்படி நடக்கும் நிகழ்வுகள்.

அதாவது, திட்டமிடப்பட்ட எதிர்கால நிகழ்வுகளைப் பற்றி பேசுவதற்கு simple present பயன்படுத்தப்படலாம். இவை அவை பொதுவாக வேறொருவரால் திட்டமிடப்பட்டவை மற்றும் அவை பொதுவாக பொது நிகழ்வுகளாகும்.

1] The plane arrives at 11.00 tomorrow.
நாளை 11.00 மணிக்கு விமானம் வரும்.
2] She has a yoga class tomorrow morning.
அவளுக்கு நாளை காலை யோகா வகுப்பு உள்ளது.
3] I have an English exam next Friday.
வரும் வெள்ளிக்கிழமை எனக்கு ஆங்கிலத் தேர்வு இருக்கிறது.
4] The plane leaves in ten minutes.
பத்து நிமிடத்தில் விமானம் புறப்பட்டு விடுகிறது.
5] It’s my birthday tomorrow.
நாளை என் பிறந்தநாள்.
[ இதில் It’s என்பது It is என்பது ஆகும். ]

3] எதிர்காலத்தைப் பற்றி பேச “going to” பயன்படுத்துதல்:

ஒருவருடைய ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளையும், நோக்கத்தையும் சேர்த்துக் கூறும் போது இந்த ‘going to’ பயன்படுத்தப்படுகிறது.

going to + verb

going to study – படிக்கப் போகிறேன்
going to go – போக போகிறேன்
going to watch – பார்க்க போகிறேன்
going to like – பிடிக்கப் போகிறது.

இனிதான் நடக்கப் போகின்றன என்பதால் இவற்றை எதிர்கால வாக்கியங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.

1] I am going to finish my report tonight.
இன்றிரவு என் அறிக்கையை முடிக்கப் போகிறேன்.
2] She is going to do some research this afternoon.
இன்று மதியம் சில ஆராய்ச்சி செய்யப் போகிறாள்.
3] He is going to talk to his father tonight.
இன்றிரவு அவன் அப்பாவிடம் பேசப் போகிறான்.

The Four Types of Future Tense :

  • 1]  Simple Future Tense.
  • 2]  Future Continuous Tense.
  • 3]  Future Perfect Tense.
  • 4]  Future Perfect Continuous Tense.

Tags,
tense in tamil,verbs in tamil,verbs and tense in tamil,what is verb in tamil,what is tense in tamil,types of tense in tamil,types of verbs in tamil,12 tenses in tamil,basic grammar in tamil,basic tense in english grammar in tamil,basic english grammar in tamil,all tenses in tamil,future tense,future tense in tamil,

Leave a Comment

Your email address will not be published.