English basic words – Part 2 / pronoun – ‘WE’ // English Grammar in Tamil / tamilvazhikkatral

         அடிப்படை ஆங்கில வார்த்தைகளும் அதன் விளக்கம் மற்றும் பயிற்சிகளில் இந்த இரண்டாவது பகுதியில் ‘ WE ‘ – தொடர்பான விவரங்கள்.

English basic words :

ஆங்கில வார்த்தைகளும்,  அதன் பயன்பாடுகளும்  :

                                         ‘ We ‘ 


English basic words – 3 / pronoun – ‘WE’ // For English Grammar in Tamil [ தமிழில் ]


        We 
us,
our ______, 
ours,
ourselves, 


We are brothers. – நாம் சகோதரர்கள்.
We are good friends. – நாங்கள் நல்ல நண்பர்கள்
We know that. – நமக்குத் தெரியும்.
Our home is a garden. – நம் வீடு ஒரு பூந்தோட்டம்.
We will protect ourselves. – நம்மை நாமே பாதுகாப்போம்.
The car is ours. – கார் நம்முடையது.

[‘நாம்’ என்பதில் மட்டும் அல்ல ‘எங்கள்’ என்பதற்கும் நாம் ‘WE’ தான் பயன்படுத்துகிறோம்.]

President of our school. – எங்கள் பள்ளியின் தலைவர்.

We like dessert. – எங்களுக்கு இனிப்பு பிடிக்கும்.

Follow us – எங்களைத் தொடர்ந்து வாருங்கள்

Talk to us. – எங்களுடன் பேசுங்கள்.

The car is ours. – கார் எங்களுடையது.

We
[ we எப்போதும் வாக்கியத்தின் முதலில் மட்டுமே வரும், அது சாதாரண வாக்கியமாக இருக்கும் பட்சத்தில் ]
உதாரணம் :
 we are in school
    நாங்கள் பள்ளியில் இருக்கிறோம்
      நாம் பள்ளியில் இருக்கிறோம்
we study english
  நாங்கள் ஆங்கிலம் படிக்கிறோம்
   நாம் ஆங்கிலம் படிக்கிறோம்
we did this work
  நாங்கள் இந்த வேலையைச் செய்தோம்

   நாம் இந்த வேலையைச் செய்தோம்

வினாவாக்கியத்தில் ‘we’ இடையில் வரும். 
உதாரணம் :
what did we eat?
  நாங்கள் / நாம்  என்ன சாப்பிட்டோம்?
Where are we going?
  நாம் எங்கே செல்கிறோம்?

[மேலும் இரண்டு வாக்கியங்கள் இணையும் போதும் ‘we’ இடையில் வரும், அதாவது இடையில் வருவது போல தோற்றம் அளிக்கும்.]
உதாரணம் :
I wish we shall see our mother today

     இன்று நாம் / நாங்கள்  தாயைப் பார்ப்போம் என்று விரும்புகிறேன்






us
[ ‘us’ என்பது வாக்கியத்தின் முதலில் வராது. இடையிலும், இறுதியிலும் வரும் ]
Help us 
        –  எங்களுக்கு உதவுங்கள்.
Stay here with us
        – எங்களுடன் இங்கேயே இருங்கள்.
He can control us

         – அவரால் நம்மைக் கட்டுப்படுத்த முடியும்
.He asked us 
        – அவர் எங்களிடம் கேட்டார்
He would believe us.
            – அவர் எங்களை நம்புவார்.
All this belongs to us.
           – இதெல்லாம் நமக்கு சொந்தமானது.
One of us should eat this.
         – நம்மில் ஒருவர் இதை சாப்பிட வேண்டும்

Our ______ :
 [ இந்த our ______ ‘  – என்ற வார்த்தை வாக்கியத்திற்கு முதலில், இடையில், இறுதியில் எல்லா இடங்களிலும் வரும் ]
  Our father is a teacher – எங்களுடைய அப்பா ஓர் ஆசிரியர்
  This is our car இது எங்கள் கார்
   I love our grandmother நம்முடைய பாட்டியை எனக்கு  மிகப் பிடிக்கும்.
  Radha and our mother went to the store – ராதாவும் நம்முடைய அம்மாவும் கடைக்குச் சென்றார்கள்.




ours
[ ‘ours ‘ – என்ற வார்த்தை ஒரு முழுமையான வார்த்தையாகும். இது தனித்தும் வரும். ஆனால் அது பேச்சு வழக்கில். இந்த வார்த்தை வாக்கியத்தின் முதலிலும் இறுதியிலும் வரும்.]
  This house is ours 
                – இந்த வீடு எங்களுடையது.
  He lives in the apartment above ours
               – அவர் எங்களுக்கு மேலே உள்ள குடியிருப்பில் வசிக்கிறார்.
  Ours is white 
                – எங்களுடையது வெள்ளை

  Victory is ours 
                 – வெற்றி நம்முடையது.


Ourselves
 [ இந்த ourselves என்ற வார்த்தைக்கு நம்மை, நம்மையே, நம்மை நாமே என்றெல்லாம் வாக்கியத்தைப் பொறுத்து அர்த்தம் உண்டு. ]
   We can do it ourselves
          அதை நாமே செய்ய முடியும்.
  We must take care of ourselves
       – நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்.
  We have to question ourselves

          – நம்மை நாமே கேள்வி கேட்கவேண்டும்


Exercises – பயிற்சிகள்
[ We,  Us,    Our____,     Ours,    Ourselves ]

  1. ____  made this cake. [இந்த கேக்கை நாங்கள்செய்தோம்.]
  2. He is ___ friend. [அவர் எங்கள் நண்பர்.]
  3. Which one is ___ ?  [எது நம்முடையது?]
  4. The officer gives ___ this work. [அதிகாரி இந்த வேலையை எங்களுக்குத் தருகிறார்.]
  5. ____ shall play football. [ நாங்கள் கால்பந்து விளையாடுவோம்.]
  6. ____ were educated in public school. [நாங்கள் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்]
  7. This class-room is ____ . [இந்த வகுப்பு அறை எங்களுடையது.]
  8. ____town is big. [எங்கள் நகரம்பெரியது.]
  9. Tell us about _______ . [நம்மைப் பற்றி சொல்லுங்கள்]
  10. ____ are Indians [நாங்கள் இந்தியர்கள்]
  11. One of ___ will have to go. [நம்மில் ஒருவர் செல்ல வேண்டியிருக்கும்.]
  12. This is ___problem. [இது எங்கள்பிரச்சினை.]
  13. ___ shall come there. [நாங்கள் அங்கு வருவோம்.]
  14. Our mother bought ____ a puppy. [எங்கள் அம்மா எங்களுக்கு ஒரு நாய்க்குட்டியை வாங்கினார்.]
  15. This is ___school. [இது எங்கள் பள்ளி.]
  16. Let us not fight ________ . [நாமே சண்டையிட வேண்டாம்.]
  17. ____  are book-sellers. [நாங்கள் புத்தக விற்பனையாளர்கள்.]
  18. These shops are ____ . [இந்த கடைகள் எங்களுடையவை.]
  19. We are four in ____family. [எங்கள் குடும்பத்தில் நாங்கள் நான்கு பேர்.]
  20. She told ___ . [அவள் எங்களிடம் சொன்னாள்]
  21. Tamil is ____language. [தமிழ் எங்கள் மொழி.]
  22. We should be proud of _______ . [நாம் நம்மைப் பற்றி பெருமைப்பட வேண்டும்.]
  23. All of ___ want to go there. [நாம் அனைவரும் அங்கு செல்ல விரும்புகிறோம்.]
  24. she brought ____ coffee. [அவள் எங்களுக்கு காபி கொண்டு வந்தாள்]
  25. We introduced ______  to each other. [ஒருவருக்கொருவர் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

Answers – விடைகள்
 We made this cake. [நாங்கள்]
 He is our friend. [எங்கள் நண்பர்]
 Which one is ours?  [நம்முடையது]
 The officer gives us this work. [எங்களுக்கு]
 We shall play football. [ நாங்கள்]
We were educated in public school. [நாங்கள்]
 This class-room is ours. [எங்களுடையது]
 Our town is big. [எங்கள் நகரம்]
 Tell us about ourselves. [நம்மை]
 We are Indians [நாங்கள்]
One of us will have to go. [நம்மில் ஒருவர்]
 This is our problem. [எங்கள் பிரச்சினை.]
 We shall come there. [நாங்கள்]
 Our mother bought us a puppy. [எங்களுக்கு]
 This is our school. [எங்கள் பள்ளி.]
 Let us not fight ourselves. [நாமே]
We are book-sellers. [நாங்கள்]
 These shops are ours. [எங்களுடையவை]
 We are four in our family. [எங்கள் குடும்பத்தில்]
 She told us. [எங்களிடம்]
 Tamil is our language. [எங்கள் மொழி]
 We should be proud of ourselves. [நம்மை]
All of us want to go there. [நாம் அனைவரும்]
she brought us coffee. [எங்களுக்கு]
We introduced ourselves to each other. [நம்மை]




Tags.
எளிய முறையில் ஆங்கிலம், ஆங்கில பயிற்சிகள்,Eliya murayil aangilam, Spoken English tamil, Tamil to English, English learning for beginners in Tamil, Learning English through Tamil full course part 1, Basic English Words in Tamil, English Grammar in Tamil, English Grammar lessons in Tamil, Learn English Through Tamil, Tamil to English Grammar, Learn English Grammar in Tamil, Basic English Grammar in Tamil, English Basic Words in Tamil, English Basic words with Tamil meanings, small English words with Tamil meanings, 


Leave a Comment

Your email address will not be published.